ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்ட சகோதரர்கள்.. காரணம் என்ன தெரியுமா?

 ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்ட சகோதரர்கள்.. காரணம் என்ன தெரியுமா?



இமாச்சலப் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது



கபில் நேகி மற்றும் பிரதீப் நேகி இருவரும் இமாச்சலப் பிரதேசத்தில் சிர்மூர் மாவட்டத்தில் உள்ள ஷில்லை கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள். இவர்களில் பிரதீப் ஜல்சக்தி துறையில் பணியாற்றுகிறார். கபில் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் சுனிதா சவுகான் என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் ஹாட்டி சமூகத்தின் பழமையான பாரம்பரிய கலாச்சார முறைப்படி மூன்று நாட்களாக பஹாரி இசை, நடனம் என கோலாகலமாக நடைபெற்ற நிலையில் அனைவராலும் கவனிக்கப்படும் திருமணமாக மாறியுள்ளது.

ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்ட சகோதரர்கள்

ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்ட சகோதரர்கள்

பாலியாந்த்ரி என்ற பழமையான கலாச்சாரம் முறைப்படி நடந்த திருமணம் குறித்து பேசியிருக்கும் சகோதரர்கள், தங்களது கலாசாரத்தை நினைத்து பெருமைப்படுவதாகவும், இதை மனதார கொண்டாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கபில் கூறும்போது, ​​"எங்கள் மனைவிக்கு நாங்கள் இருவரும் பாதுகாப்பும், அன்பும் தருகிறோம். இது ஒரே குடும்பம் என்பதற்கான உதாரணம்." என்று கூறியுள்ளார். மணப்பெண் சுனிதா சவுகான், “இது என்னுடைய விருப்பத்தால் நடந்தது. முடிவை எடுத்தோம்." என்று தெரிவித்துள்ளார்.

பாலியாண்ட்ரி கலாச்சாரப்படி ஒரே குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்கிறார்கள். இமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் எல்லையில் உள்ள ஹாட்டி சமூகம் பழங்குடியினர் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மலைப்பகுதியில் வசிக்கும் இவர்கள் தங்களது நிலம் பறிபோகாமல் இருப்பதற்கும், குடும்ப ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கும் திருமணம் மற்றும் கலாச்சாரத்தை காலம் காலமாக பின்பற்றி வருவதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

Post a Comment

Previous Post Next Post