டாப் ஹீரோயின்களுக்கு போட்டியாக கவர்ச்சியில் களம் இறங்கும் ஹீரோயின்.. யார் தெரியுமா?
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களின் மனதில் வேரூன்றியிருக்கும் நடிகை தான் ரிது வர்மா. சிறப்பான தேர்வுகள், தனித்துவமான கதாபாத்திரங்கள், நேர்த்தியான நடிப்பு – இவையெல்லாம் சேர்ந்து ரிதுவை ரசிகர்கள் “மாதர்ன் மகாலட்சுமி” என்று அழைக்கிறார்கள். வைத்துவிட்டன.
‘வேலையில்லா பட்டதாரி’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் அவர் நடித்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக, கவர்ச்சி காட்டாமல் தனது இயல்பான அழகு, மென்மையான புன்னகை, நம்பிக்கைக்குரிய நடிப்பு மூலம் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தவர் என்ற புகழ் ரிதுவுக்கே.
ஆனால், இப்போது சினிமா வட்டாரங்களில் பரவிக் கொண்டிருக்கும் ஹாட் அப்டேட் வேற மாதிரி இருக்கிறது! இதுவரை கவர்ச்சி கதாபாத்திரங்களை தவிர்த்து வந்த ரிது, இனிமேல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய “ஒருமுறை கவர்ச்சியாக நடித்து பார்ப்போமே...” முடிவு செய்துவிட்டாராம். தனது நலம் விரும்பிகளின் ஆலோசனையும், சில சக நண்பர்களின் கருத்துகளும் இந்த முடிவுக்கு காரணமாம்
