சமூக வலைதளத்தை விட்டு விலகிய பிரபல நடிகை – ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கடைசி பதிவு!
சமூகவலை தளத்தில் பிரபல நடிகை போட்ட பதிவால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.. மீண்டும் சந்திக்கிறேன் என்ற வார்த்தை ரசிகர்களின் மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும் அவர் எடுத்திருக்கும் முடிவு திரையுலகையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..
தென்னிந்திய திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. தனது அழகு, கவர்ச்சி, மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். குறிப்பாக அருந்ததி, பாகமதி, பாகுபலி போன்ற படங்கள் மூலம் அவர் தென்னிந்திய அளவில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அவரது திரைப் பயணத்தில் சவால்கள் அதிகரித்தன.
2016 ஆம் ஆண்டு வெளியான சிங்கம்-3 படத்துக்குப் பிறகு அனுஷ்கா நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. அதன்பிறகு அவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களிலேயே கவனம் செலுத்தி வந்தார். 2023 ஆம் ஆண்டு வெளிவந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம், ரசிகர்களிடையே ஒரு அளவு வரவேற்பைப் பெற்றாலும், அனுஷ்காவுக்கு அவர் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை.
இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த காத்தி படத்தின் மூலம் அவர் மீண்டும் திரையுலகிற்கு வந்தார். ஆனால் அந்தப் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் அனுஷ்கா மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

