உங்கள் பர்ஸ் காலியாகாமல் இருக்க 12 சிக்கன நடவடிக்கைகள்!

சிக்கனம் என்பது ஒவ்வொருவரும் வாழ்விலும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
எதிர்கால வளமான வாழ்வுக்கும் வளத்துக்கும் சேமிப்பு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. சிக்கனமாக இருப்பது சேமிப்பதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது. அந்த சிக்கனத்தை கடைபிடிப்பதற்கு அவசியமான பன்னிரு யோசனைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம். 1. எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்றாலும் அதை உடனே வாங்காதீர்கள். சற்றே தள்ளிப் போடுங்கள். அடுத்த நாள் அந்தப் பொருளை வாங்குவது அவசியம்தானா என பலமுறை யோசியுங்கள். அது இல்லாமலும் சமாளிக்க முடியும் என்றால் அந்தப் பொருளை வாங்கவே வேண்டாமே. 2. ஒவ்வொரு மாதமும் செலவுகளுக்கு ஒரு பட்ஜெட் போடுங்கள். மளிகை, காய்கறி, பால், சினிமா, பொழுதுபோக்கு, பெட்ரோல், வாடகை, மருத்துவ செலவு, திருமண விசேஷம் என எல்லாவற்றுக்கும் ஒரு பட்ஜெட் போடுங்கள் 3. தற்போது மொபைலில் ஆன்லைனில் பணம் செலுத்துவது நடைமுறையில் உள்ளது. அதனால் எவ்வளவு செலவு செய்கிறோம் என்று நமக்குத் தெரிவதில்லை. மாதக் கடைசியில்தான் எக்கச்சக்கமாக செலவு செய்திருப்பது தெரிகிறது. நாம் ஆன்லைனில் பணம் கட்டி இருந்தாலும், ஒரு நோட்டில் இரவு தூங்கும் முன் அன்றைய செலவுகளை தினமும் எழுத வேண்டும். ஒரு வாரம் ஒரு முறை அந்தக் கணக்கு நோட்டை எடுத்து பார்த்தால், எதற்கு நாம் அதிகமாக செலவு செய்கிறோம் என்று தெரிந்து கொண்டு அடுத்த வாரம் அந்த செலவை குறைத்துக் கொள்ள பழக வேண்டும். 4. சிக்கனமாக இருப்பதற்கு சிறந்த வழி சேமிப்புதான். முதலில் சேமிப்பு, பிறகுதான் செலவு என்ற கொள்கையை கடைபிடித்தால் சிக்கனம் தானாக வந்து விடும். ஆர்.டி, எப்.டி, பிபிஎப் என்று சேமிப்பிற்கு பணம் ஒதுக்கிவிட்டு மீதியை செலவழிக்க ஒதுக்க வேண்டும்.
5. முன்பெல்லாம் நமது அம்மாக்கள் வீட்டில் ஏதாவது மளிகைப் பொருட்களோ, காய்கறிகளோ தீர்ந்து விட்டால் இருப்பதை வைத்து சமாளித்தார்கள். அந்தப் பழக்கம் இப்போதைய பெண்களிடம் வர வேண்டும். உடனே போனை எடுத்து ஆர்டர் செய்வது, ஆன்லைனில் வாங்குவது என்ற கலாசாரத்தை விட்டு ஒழிக்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post