.தளபதி விஜய்யின் கோட் படத்தில் வசீகரா படத்துக்குப் பிறகு அவருக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்த நடிகை சினேகா தனது துணிக்கடை வியாபாரத்தையும் மென்மேலும் பெருக்கி வருகிறார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்காக சினேகா பட்டு சேலையில் ராஜமாதா போல ரெடியாகி வந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. நடிகை சினேகாவுக்கு பிரபல டிராப்பிஸ்ட் திவ்யன் ஜெயரூபன் தான் டபுள் டிராப் சேலை கட்டி விட்டுள்ளார். அந்த வீடியோவை நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மார்வலஸ் மார்கழி என்கிற ராம்ப்வாக் நிகழ்ச்சிக்காக சினேகாவுக்கு திவ்யன் ஜெயரூபன் சேலை கட்டி விட்டுள்ளார். இவருக்கு மட்டுமின்றி த்ரிஷா, விஜே பிரியங்க, சமந்தா உள்ளிட்ட பலருக்கும் இவர்களின் ஆடைகளை சரியாக அணிவித்து அழகுபடுத்தும் வேலையை பார்த்து வருவதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்.
