பணி காரணமாகவோ அல்லது உயர்கல்விக்காகவோ வெளியூரில் தங்கி இருக்கும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது. இதுபோல தங்கி இருக்கும் பெண்கள் பெரும்பாலும் மகளிர் விடுதி அல்லது பிற பெண்களுடன் சேர்ந்து வீடோ அல்லது...
பெண் வீடு 1
பணி காரணமாகவும் அல்லது உயர்கல்விக்காகவோ வெளியூரில் தங்கி இருக்கும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது. இதுபோல தங்கி இருக்கும் பெண்கள் பெரும்பாலும் மகளிர் விடுதி அல்லது பிற பெண்களுடன் சேர்ந்து வீடோ அல்லது அறையோ எடுத்து தங்குவதை விரும்புவார்கள்.
பெண் வீடு
ஆனால் சில பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் தனியாக வசிக்கும் நிலை இருக்கலாம். இந்த நிலையில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பின்வரும் குறிப்புகளை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
தனியாக வசிக்கும் பெண் தான் இருக்கும் வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பின் கதவுகள், ஜன்னல்கள், பூட்டுகள் ஆகியவை பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை உறுதி சொல் கொள்ள வேண்டும். பயோமெட்ரிக் அனுமதியுடன் கூடிய ஸ்மார்ட் கதவு பூட்டு அல்லது கடவுச்சொல்லுடன் கூடிய டிஜிட்டல் பூட்டை நிறுவலாம்.
வீட்டில் பெண்
புதிதாக ஒரு வீட்டிற்கு குடியேறிய உடன் பூட்டுக்களை மாற்றி மாற்று சாவிகள் யாருக்கும் எளிதாக கிடைக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
செக்யூரிட்டி கேமராக்கள், டோர் பெல் கேமராக்கள் போன்ற ஸ்மார்ட் சாதனங்கள் கண்காணிப்புக்கு உதவும். நாம் வெளியில் இருந்தாலும் வீட்டை கவனிக்க வேண்டிய சாதனங்கள் கை கொடுக்கும்.
வீட்டில் பெண்
நாய் வளர்ப்பதை பலரும் சிறந்த பாதுகாப்பு உத்தியாக கருதுகிறார்கள். பராமரிக்க முடிந்தால் செல்லப்பிராணி வளர்ப்பில் ஆர்வம் இருந்தால் நாய் வளர்க்கலாம்.
தனியாக வசிக்கும் பெண்களின் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.
வீட்டு அலுவலகம்
போலீஸ் அவசர அழைப்பு எண் (100) , தேசிய மகளிர் ஆணைய உதவி எண் (011-23237166), பெண்கள் உதவி எண் (181) போன்ற அவசர தொடர்பு எண்களை நினைவில் கொள்ளுங்கள் வைத்திருக்கவும்.
