நடிகை தமன்னா பாட்டியா சமீபத்தில் ஒரு பேட்டியில் படுக்கையறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் பற்றி திறந்து பேசினார். அவரிடம் நேரடியாக கேட்கப்பட்ட கேள்வி: "படுக்கையறை காட்சிகளில் ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யும்போது, நிஜமாகவே அந்த உணர்வு ஏற்படுகிறதா? உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?" என்பதாகும்.
இதற்கு பதிலளித்த தமன்னா, "இது உங்கள் கேள்வி மட்டுமல்ல, படம் பார்க்கும் அனைவருக்கும் இருக்கும் கேள்வி. ஆனால் உண்மை என்னவென்றால், நடிகர்-நடிகை இருவரும் அந்த காட்சிகளில் நடிப்பது என்பது இருவருக்கும் தெரிந்த விஷயம்.
படப்பிடிப்பு தளத்தில் லைட்மேன், இயக்குனர், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் சுற்றி இருப்பார்கள். அப்படி இருக்கும்போது எப்படி நிஜமான ரொமான்ஸ் உணர்வு வரும்? வீடியோவில் பார்க்கும்போது அப்படி தோன்றலாம், ஆனால் அது வெறும் நடிப்பு மட்டுமே" என்றார்.
மேலும், "பல சமயங்களில் நடிகைகளைவிட நடிகர்களே அதிகம் சங்கடப்படுவார்கள். புதிய நடிகராக இருந்தாலும், 'அத்து மீறிவிடுமோ, தவறாக நடந்துவிடுமோ' என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். இதை பல நடிகர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.
சில சமயங்களில் நடிகைகள் புகார் கொடுக்கும் அளவுக்கு பிரச்சினைகள் நடந்திருக்கின்றன. அதனால் நடிகர்கள் பயத்துடனே நடிப்பார்கள். ஆனால் நான் நடிகையாக, காட்சி நன்றாக வர வேண்டும் என்ற நோக்கில் எந்த விதிமுறையும் உள்ளது விதிக்காமல் நடிப்பேன்.
சூழலை புரிந்துகொண்டு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதுதான் படப்பிடிப்பு தள உண்மை" என்று கூறினார். தமன்னா நேரடியாக பதிலளித்து, "ஒருவேளை அப்படி உணர்வு தோன்றினாலும், சுற்றிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஒருமுறை பார்த்தால், அடுத்த நிமிடமே அந்த உணர்வு போய்விடும்!" என்று நகைச்சுவையாகவும் தைரியமாகவும் பதிலளித்தார்.
தமன்னாவின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
